மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 35-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோட்டோவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பிரனாய் 19 க்கு 21, 21 க்கு 17, 21 க்கு 16 என்ற செட் கணக்கில் நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், 23 க்கு 21, 13 க்கு 21, 21 க்கு 11 என்ற செட் கணக்கில் லூ குயாங் சூவை தோற்கடித்தார்.