கன்னியாகுமரியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபடும் விதமாகத் துபாயில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் துபாயில் உள்ள அஜ்மான் பகுதியில் பொங்கல் விழாவை நடத்தினர்.
வின்னர்ஸ் ஸ்போட்ஸ் விடுதி சார்பாக நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் பகவதி அம்மனை சிலையாக அமைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
பின்னர் பாரம்பரிய உடை அணிந்த தமிழர்கள், மூன்றாவது ஆண்டாக இந்த பொங்கல் வழிபாட்டை நடத்துவதாகவும், 13 நாடுகளில் இதே போன்ற வழிபாடு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இண்டர்நேசனல் பகவதி அம்மன் சேவா டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்த பகவதி அம்மன் வழிபாட்டில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.