குத்தாலம் அருகே நடவு செய்த பயிரை டிராக்டர் வைத்து அழித்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு தொழுதாலங்குடி கிராமத்தில் 19 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், 7 ஏக்கர் நிலத்தில் உறவினரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளார்.
இதனிடையே, கிருஷ்ணமூர்த்தி மகன் சாமிநாதனிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தி 5 ஏக்கர் நிலத்தை அதிமுக பிரமுகரான வைத்தியநாதன் என்பவர் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், குறுவை சாகுபடி செய்துள்ள சீனிவாசனின் நிலத்தில் டிராக்டரை உழுது வைத்தியநாதன் சேதப்படுத்தியுள்ளார்.
இதனைக் கண்டித்து சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.