நகை அடமான கடனுக்கு விதித்துள்ள புதிய விதிகளை ஆர்பிஐ திருப்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எனவும், அவர்கள் நகைக்கடனைப் பயன்படுத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகைக்கடனுக்கு ஆர்பிஐ விதித்துள்ள விதிமுறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நகையின் மதிப்பில் 80 விழுக்காடு கடன் அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஆர்பிஐ தற்போது 75 விழுக்காடாகக் குறைத்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.
மேலும், நகை அடமானம் வைப்பவர் இனி நகைக்கான ரசீதைக் காண்பிக்க வேண்டும் எனவும், தகுந்த ஆவணம் தர வேண்டும் என்பதையும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்
வங்கிகள் விற்கும் தங்கக் காசுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுவது உள்ளிட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ்
ஆர்பிஐ-யின் புதிய விதிமுறைகளால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரிசர்வ் வங்கி விதித்துள்ள இந்த விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.