கோவையில் பெண் யானை உயிரிழப்புக்கு வனத்துறை பொறுப்பல்ல என அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலட்சியத்துடன் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் மருதமலை அருகே பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் கழிவுகளை உண்டதால் யானை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், உடல்நலக்குறைவு காரணமாக யானை உயிரிழந்ததால் பதில் சொல்லத் தேவையில்லை எனக் கூறினார்.