பெங்களூரைச் சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தானியங்கி காரை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களும் கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.