இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக நெதர்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவைப் பொறுத்தவரைப் பயங்கரவாத பிரச்சனையும், காஷ்மீர் பிரச்சனையும் தனித்தனியான விஷயங்கள் எனத் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் பற்றி அமெரிக்கா பேசியபோது, பாகிஸ்தான் நேரடியாக அதை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தியதாகவும், இறுதியில் அதுதான் நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.