ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சேலத்தில் நடந்த அமைதி பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நடைபெற்ற மூவர்ணக் கொடி அமைதி பேரணியை மாநகர மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக மாநில சுற்றுச்சூழல் அணித் தலைவர் கோபிநாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணியில் 100 மீட்டர் மெகா தேசியக் கொடியைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிடித்துச் சென்றனர். இதில், முன்னாள் ராணுவ வீரர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் காந்தி ரோட்டில் தொடங்கிய பேரணி கோட்டை மைதானத்தை வந்தடைந்தது. பாஜகவின் அமைதி பேரணியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.