அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் நிலமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருந்தது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மா.சுப்பிரமணியன் மீதான இந்த வழக்கைச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால் நீதிபதி பிரபாகரன் விசாரித்து வந்த இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதன் காரணமாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுப் பதிவு மற்றும் வழக்கு விசாரணை ஜூன் 17-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுவதாகக் கூடுதல் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.