வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுஸ், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல்களை நடத்துவது, மியான்மரின் ராக்கைன் பகுதிக்கு வழித்தடத்தை உருவாக்குவது உள்ளிட்டவற்றில், முகமது யூனுஸிற்கும், வங்கதேச ராணுவத் தலைவர் வக்கார்-உஸ்-ஜமானிற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், முக்கிய விவகாரங்களில் பொதுவான கருத்தை எட்ட முடியாவிட்டால், தான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என முகமது யூனுஸ் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.