திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை மற்றும் வார விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இலவச தரிசன டோக்கன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
மேலும், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி மலையில் தங்கும் அறைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால், ஏராளமான பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் பணிகளைத் தேவஸ்தான நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.