மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் தனது 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஜிம்மி டொனால்ட்சனின் நிகர மதிப்பு, தற்போது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மிஸ்டர் பீஸ்ட் என்ற யூ-டியூப் சேனலை தவிர அவர் பீஸ்ட் பர்கர் என்ற துரித உணவு நிறுவனங்களையும், பீஸ்ட் பிளஸ் என்ற சாக்லேட் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.