டெல்லி பல்கலைக்கழகத்திற்கு முன்னறிவிப்பின்றி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்துக்கு சென்றார்.
அங்கு அவர் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்து புதிய கல்வி கொள்கை, ஜனநாயக பங்கேற்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி இடங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் திடீர் வருகைக்கு டெல்லி பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல்காந்தியின் திடீர் வருகை பல்கலைக்கழக நெறிமுறைகளை மீறுவதாக உள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், எந்த அறிவிப்பும் இல்லாமல் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்திற்கு திடீரென 2-வது முறையாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.