கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கவுள்ளது,.
ஆண்டு தோறும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கொடைக்கானலில் நடைபெற்றது வருவது வழக்கம். அதை போல் இந்த ஆண்டு கூடுதலாக பல பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான உருவ பொம்மைகளின் மேல் மலர்களை வைத்து அலங்கரிக்கபட்டுள்ளது.
குறிப்பாக இன்று தொடங்கவுள்ள கோடைவிழா, மலர்கண்காட்சி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், விளையாட்டு போட்டிகள், படகுப் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.