சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே மூதாட்டியை கொன்று, நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுபவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சின்னேரிகாடு பகுதியை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், குற்ற செயலில் ஈடுபட்டு விட்டு, சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த நபதை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோரை அந்த நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காலில் பலத்த காயமடைந்த நரேஷ் குமாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தினை சேலம் சரக டிஐஜி உமா மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.