ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருந்த பயணிகள் மீது திடீரென பெண் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் காயமடைந்த 12 பேரில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கத்தியால் தாக்கிய பெண்ணை அங்கு இருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கத்தி குத்து தாக்குதல் நடத்திய பெண்ணின் நோக்கம் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.