மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் 4 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், இந்திராவதி ஆற்றங்கரையோரம் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகளைச் சுற்றி வளைத்தனர்.
அப்போது மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மாவோயிஸ்ட்டுகள் 4 பேரை, 2 மணி நேரத் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.