அவசர நிலையில் வான் பரப்பைப் பயன்படுத்த அனுமதி கோரிய இந்திய விமானத்திற்குப் பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துள்ளது.
டெல்லியிலிருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் உட்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸ் வான் பரப்பில் பறந்தபோது, பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் சிக்கிக் குலுங்கியது.
அப்போது நிலைமையைச் சமாளிக்க எண்ணிய விமானி, பாகிஸ்தான் வான் பரப்பைப் பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி கோரினார்.
அப்போது அவர்கள் பாகிஸ்தான் வான் பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்த நிலையில், விமானி மோசமான வானிலைக்கிடையே விமானத்தை இயக்கி அதனை ஸ்ரீநகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.