பிரான்சில் நடைபெற்ற 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அணிந்து வந்த கருப்பு நிற ஆடையின் மேல், பகவத்கீதை ஸ்லோகம் பொறிக்கப்பட்ட ஜரிகைப்பூ வேலை செய்த பட்டு துணையைப் போர்த்தி வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைத்த அந்த ஆடையை அணிந்து ஐஸ்வர்யா ராய், 2-வது முறையாகச் சிவப்பு கம்பளத்தில் தோன்றி அனைவரையும் வசீகரித்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் பகவத்கீதையையும், இந்தியாவையும் கௌரவப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.