கேரளாவில் தென்-மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை அயவு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய தென்-மேற்கு பருவமழை படிப்படியாக முன்னேறி கேரளாவை அடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்-மேற்கு பருவமழை,
இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி தொடங்கிய தென்-மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 24-ம் தேதி தொடங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில தினங்களில் தமிழகத்திலும் தென்-மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.