விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆட்சியர் துணை போவதாகக் கூறினர்.
எனவே, ஆட்சியர் பதவி விலக வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலனுடன் கடும் வாக்குவாதம் செய்த விவசாயிகள், வெளிநடப்பு செய்தனர்.