டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரத்தில் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு மேல் உள்ள பலர் சிக்குவார்கள் என அதிமுக சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிராஜாராம், திமுகவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாகவும், காற்றுக்குக் கூட வரி விதித்தவர்கள் தான் திமுகவினர் என விமர்சனம் செய்தார்.