தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மூல வைகை ஆற்றுக் கால்வாயில் இருந்து மடை அமைத்து தண்ணீர் தரும் திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடைக்கம்பட்டி, பொன்னம்மாள்பட்டி, தேக்கம்பட்டி உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் திட்டமிடப்பட்டுக் கைவிடப்பட்ட மூல வைகை ஆற்று கால்வாயில் இருந்து மடை அமைத்து தண்ணீர் தரும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு மீண்டும் அனுமதி அளித்து இரண்டு ஆண்டுகளாகியும் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.