தருமபுரி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 525 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் உள்ள மண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்த நிலையில், முதல் காளையாகக் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகளும், 525 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சைக்கிள், மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.