நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எல்லைப் பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் திங்கள் கிழமை மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.