டென்மார்க்கில் ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. இதுதொடர்பான மசோதா டென்மார்க் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர். இதனால் ஓய்வூதிய வயது அதிகரிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக ஓய்வு பெறும் வயது உடைய நாடாக டென்மார்க் மாறி உள்ளது. தற்போது அங்கு ஓய்வு பெறும் வயது 67 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.