அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிக்கத் தடை விதித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவை அந்நாட்டு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியது.
இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது. முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் அரசுக்கு எதிராக நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் கோரியிருந்தார்.
ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்ததால், அதற்குச் சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும், 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.