மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவீத வரிப் பகிர்வு வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
தற்போது 33 புள்ளி 16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக வழங்கப்படுவதாகக் கூறிய அவர், மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைப்போல் காவிரி, தாமிரபரணி ஆறுகளையும் தூய்மைப்படுத்தத் திட்டம் கொண்ட வர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.