3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு மட்டும் பங்கேற்றது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பிரதமரைச் சந்திக்க முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தன என்றும் எண்ணற்ற சிக்கல்கள் வந்தபோது அவற்றைப் பிரதமரிடம் பேசி சரிசெய்திருக்கலாம் எனக் கூறிய அவர் மூன்று நிதி ஆயோக் கூட்டங்களை முதலமைச்சர் புறக்கணித்துள்ளார் என சீமான் குறிப்பிட்டார். இந்த முறை மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பினார்.