நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, ஆளுநர் இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி வழிபாடு நடைபெற்றது.