குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.