நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடியுரிமை பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 69 மையங்களில் நடைபெறும் தேர்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட 24 ஆயிரத்து 364 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
காலை 9.30 மணி முதல் 11:30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை 2-ஆம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. இதில், தேர்ச்சி பெறுவோர் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.