வார விடுமுறையைக் கொண்டாட ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், வார விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், அண்ணா சாலை, ஏரிச்சாலை, பேருந்து நிலையம், கிளியூர் நீர்வீழ்ச்சி, குகை கோயில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் சென்றதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று முன்கூட்டியே காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்காது என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.