கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சோதனைச்சாவடியில் இருந்து பாபநாசம் கோயில் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.