சேலம் அருகே உள்ள கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெட்டியூர் பகுதியில் 54 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் கொற்றவை காளியம்மன் கோயில் உள்ளது. அங்கு மகா கும்பாபிஷேக விழா ஜூன் 8-ம் தேதி நடைபெறுகிறது.
அதன் தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டனர்.