கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் இல்லாததால் கோயில் பணியாளரே அபிஷேகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
.மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் முதன்மையான பாணபுரீஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் பணிக்கு சரிவர வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கோயில் பணியாளரே ஆகம விதிகளை மீறி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.