நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த அபிநயா, நாகை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். ஆயுதப்படை குடியிருப்பில் தனித்து வாழ்ந்து வந்த அபிநயா, கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கம்போல பணிக்கு வந்த அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டி விசாரணை மேற்கொண்டார்.