திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கிரி சமுத்திரம், செட்டி அப்பனூர், வலையாம்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதே வேளையில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.