மதுரையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட பேராசிரியை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனவும் வேறு விசாரணை பிரிவுக்கு வழக்கை மாற்ற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முறையாக வழக்கை விசாரித்து வருவதால், வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.