தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.