அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் எழுந்த வினோத சத்தத்தையடுத்து பலர் அப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதாகப் பீதியடைந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பூகம்பம் ஏதும் ஏற்படவில்லை எனவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூல் மீண்டும் பூமிக்குத் திரும்பியபோதே அத்தகைய சத்தம் கேட்டதாகவும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூல் மீண்டும் பூமிக்குத் திரும்பிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.