ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது
பெருவார்கோட்டை லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்குச் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. முன்னதாக கோயில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை,தன பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
பின்னர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கும் தர்மர் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர், மோர் வழங்கினர்.