வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இன்று மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.