கவாசகி இந்தியா நிறுவனம் தனது நிஞ்சா ZX-4R பைக்கிற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மே மாதம் முழுக்க கவாசாகி நிஞ்சா ZX-4R பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 8 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது. முன்னதாக இந்த விலை 8 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
கவாசாகி நிஞ்சா ZX-4R தனது போட்டி மாடல்களான ஹோண்டா CBR650R, டிரையம்ப் டேடோனா 660 மற்றும் சுசுகி GSX-8R போன்ற மாடல்களை விற்பனையில் முந்தும் என நம்பப்படுகிறது.