ஆந்திர மாநிலம் திருமலையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், காரில் திருமலையிலிருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தனர். மலைப் பாதையில் உள்ள விநாயகர் கோயிலை அடுத்த வனப் பகுதியையொட்டிய தடுப்புச்சுவரின் மீது சிறுத்தை ஒன்று, இறையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தது.
அதைக் கவனித்த ஓட்டுநர், மெதுவாகக் காரை ஓட்டிச் சென்றார். வாகன நடமாட்டத்தைக் கண்டதும் அந்த சிறுத்தை வனப் பகுதிக்குள் குதித்துத் தப்பிச் சென்றது.