கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்ணை கொலை செய்துவிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள காட்டன்பேட் தர்கா சாலையில் ஜவுளி வியாபாரி பிரகாஷ் என்பவர், தனது மனைவி லதாவுடன் வசித்து வருகிறார்.
பிரகாஷும், அவர்களது பிள்ளைகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், லதாவைக் கொலை செய்துவிட்டு, ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.