சோனியா அகர்வால், விக்ராந்த் நடித்துள்ள WILL படத்தின் டீசர் ரிலீஸாகியுள்ளது.
அதில் ஸ்ரத்தா என்ற பெயரில் ஒரு உயில் எழுதப்பட்டுள்ளதும், அந்த ஸ்ரத்தாவை தேடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியானது. டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், WILL திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.