நடிகர் ஜாக்கி சான் குழந்தைகளின் கல்வி மற்றும் பேரிடர் நிதியாக 3400 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிதியை அவர் தனது அறக்கட்டளை மூலம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னர் தன் அறக்கட்டளை குறித்துப் பேசிய ஜாக்கிசான், இளம் வயதில் வறுமையில் வாடியதாகவும், தான் பட்ட கஷ்டத்தைப் பிறர் படக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி எனவும் தெரிவித்துள்ளார்.