வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தினால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கேரளா, கர்நாடக கடற்கரை பகுதிகள் உள்படப் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வரும் 30-ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.