நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாறை உருண்டு விழுந்தால் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டதையடுத்து கல்லட்டி மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
உதகை அருகே உள்ள 20-வது கொண்டை ஊசி வளைவில் கனமழை காரணமாகப் பாறை உருண்டு விழுந்து சாலை சேதம் அடைந்தது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால் உதகையிலிருந்து மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் பாறைகள், மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுச் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
இதனையடுத்து அவ்வழியாக மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கனரக வாகனங்களுக்கு தற்போதைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.